தேவி மந்திரம் (DEVI MANTHIRAM)
SARASWATHI NAMASTHUPYAM VARATHE KAMAROOPINI
VIDHYARAMBAM KARISHYAAMI SIDDIRBAVATHUME SADHA
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே
காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
--------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா நாராயணா நமோ!
தேவி நாராயணா நமோ!!
லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
------------------------------------------------------------------------------------------------------------------------
பொன்மாரி பூமாரியே
பொழிவாய் அருளை பண்ணாரியே
அருள்வாய் ஆடி
விளையாடி
திருவேற்காட்டில்
கருமாரி.
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
பாம்பெனவே பாங்குடனே படமெடுத்தாடு உருமாறி
மங்கள மங்கையர் குலதேவி
மாங்காடு மாரி மகமாயி
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
வேதனை அது களைவாளே சோதனை தன்னை பகிர்வாளே
சுற்றிட அன்னை வடிவுடையாள் திருவெற்றியூரில்
குடியுடையாள்
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓராயிரம் கண்ணுடையாள் உலகம்
காக்கும் இமையுடையாள்
புன்னகை தவழும் முகமுடையாள்
புன்னை
நல்லூரில் உறைந்திடுவாள்
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
சர்வ லோகினி சாம்பவியே அந்தரி சுந்தரி சௌந்தரியே
சமயம் பார்த்து அருள் தாயி சமயபுரத்து மகமாயி
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
பில்லி சூன்ய பேய் பூதம் தொல்லைகள் அகற்றும்
திரிசூலம்
கைதனில் ஏந்தி ஒரு நாழி காத்தருள் உறையூர்
வெக்காளி
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாபம் சாபம் பொடிபடுமே பாளையத்தாளை வழி படவே
பெரிய பாளையத்தம்மன் அருள் பெற்றிட வாழ்வில்
நீங்கும் இருள்
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
தீப ஒளி வழி தரிசனமே தீப தர்ஷினி தினம் பெறவே
மாவிளக்கேற்றி தாள் பணிய மயிலை கற்பகத்தாய்
அருளே
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
காலம் மாறி போனாலுமே கோலம் மாறி போனாலுமே
மாறாதுந்தன் கோலமம்மா மால்வாய் வாழும் பச்சையம்மா
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தீவில் ஒதுங்கி நின்றாலும் தாவில் விழுந்து
கிடந்தாலும்
தோளில் சுமந்து காத்திடுவாள் தொட்டியங்குலத்து
மாரியவள்
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
எல்லை வந்திட தொட்ட
வினை எல்லாம் போனது விட்டு
எனை
குற்றங்குறைகளை போக்கிடம்மா கொன்னையூர் முத்து மாரியம்மா
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
அன்னை மனம் முழு
வெள்ளை மதி நெல்லையில் உன்
பெயர் காந்திமதி
மாசாணியம்மா வாழும் மலை மகிமை
நிறைந்த ஆனைமலை
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------
மங்கையர் நெற்றி திலகம்
நீ கன்னியர்
காவல் தெய்வம் நீ
கண்டவர் மாரி சகலம்
நீ கன்னியாகுமரியில் ஸ்ரீதேவி நீ
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
மாரி உந்தன் அருளாலே
மாறும் மண்ணும் திருநீராய்
திருமறை போற்றும் மூகாம்பிகை
திருவாரூரில் கமலாம்பிகை
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
மாரி என்றாலே மழை
பொழியும் தேவி என்றாலே தினை
விளையும்
தேடி வந்தாலே வினை
அகலும் திருக்கடையூரில் மனம் அடையும்
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஆதி சங்கரன் மேனியிலே பாதியானவள் அபிராமி
தில்லையில் ஆடும் சிவகாமி இல்லையேல் இங்கு
சிவனேது
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
காஞ்சியில் அன்னை காமாட்சி காசியில் அன்னை
விசாலாட்சி
மதுரையாளும் மீனாட்சி மதுராபுரியிலும் உனதாட்சி
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
தக்க்ஷன் அப்பன் என்றாலுமே தர்க்கம் செய்தாய்
தாக்க்ஷாயினி
துக்கம் தாளா நெஞ்சுடனே கயிலை வந்தாய் துணிவுடனே
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தீயும் மாறும் பூவாகவே நீரும் மாறும் பாலாகவே
வசந்தம் வீசும் ஊரானதே வலங்கைமானும் வீடானதே
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
சக்தி என்றே ஜகம் சுழலும் சுற்றி வந்தாலே
சுகம் பெருகும்
ஜெயமே தருவாள் ஜகதாம்பாள் புதுக்கோட்டை ஸ்ரீபிரகதாம்பாள்
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
நாடும் ஏடும் புகழுமம்மா நார்த்தாமலை முத்துமாரியம்மா
எண்திசை உன்திசை நாடுதம்மா பட்டுக்கோட்டை
மாரியம்மா
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மால் உறங்கும் திருவரங்கம் வந்த நாயகி ரெங்க
நாயகி
திருவானை காவலிலே அகிலாண்டேஸ்வரி நாயகியே
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
அறம் தாங்கும் அறந்தாங்கியே வீரமாகாளி வேப்பிலைகாரி
கருணை புரியும் நிரந்தரியே கண்ணபுரத்து புரந்தரியே
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
அன்பின் வடிவம் உமை வடிவம் உமையின் வடிவம்
மூவுலகம்
அம்மா வாழும் திருபுவனம் அங்கே பக்தியின்
மனம் கமழும்
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி மேல்மலையனூர் ஈஸ்வரி
திருப்பத்தூரில் பூமாயினி திருசெந்தூரும் உந்தன் பதி
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
கண்ணன்குடியில் பூ மிதிக்க கஷ்டங்கள் ஓடும்
தலை தெறிக்க
கண்ணனூரிலே கால் பதிக்க எண்ணம் ஈடேறும் நாள்
முழுக்க
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
ஓம் தேவி அங்கயற்கண்ணி ஓம் காளி முண்டகக்கண்ணி
முப்பெரும் தேவி முப்பாத்தம்மா மூத்தவள்
நீயே முத்தாலம்மா
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
------------------------------------------------------------------------------------------------------------------------------
பூவாடைகாரியம்மா படை வீட்டில் நீ ரேணுகாம்பா
காரைக்குடியில் கொப்புடையம்மா கரகம் சுழலும்
கடும்பாடியம்மா
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
சத்திய வாக்கு மீறாமலே தர்மம் காப்பாய் சாளியத்தம்மா
தாலி பாக்கியம் தருவாளம்மா பொற்பனைக்கோட்டை
காளியம்மா
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
வினை அகற்றும் வெளுவூர்க்காளி பயம் அகற்றும்
பரனூர்மாரி
குறிச்சி குளத்தில் முத்துமாரி சீகனேந்தலில்
பச்சையம்மா
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
எழுதும் வேலை என் வேலை என்றது உந்தன் கை
வீணை
அகிலம் போற்றும் கலைவாணி அபயம் என்றாலே துணை
வா நீ
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
பாடும் வேலை என் வேலையே பகன்றது உந்தன் பொன்
வீணையே
நாவில் சரஸ்வதி புகுந்தாயே நமஸ்கரித்தேனே
என் தாயே!
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
ஆடும் வேலை என் வேலையே ஆடிட வைப்பது உன்
லீலையே
ஆடும் பாதம் உன் பாதமே அபிநயம் யாவும் உனது
உபயம்
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மருவத்தூரில் ஆதி சக்தி சிறுவாச்சூரில் மதுரகாளி
திருவக்கரையில் வக்ரகாளி ஆலமேட்டினில் பத்ரகாளி
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
பூர்வ புண்ணிய மனோஹரி சாமுண்டீஸ்வரி ஸ்ரீ
ஜனனி
ஓம் சாந்தி சாந்தினியே சோட்டானிக்கரை பகவதியே
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
உலகம் யாவும் ஒரு மாரி தஞ்சை மாரி தமிழ்
மாரி
போற்றி போற்றியே பொன்மாரி போற்றி போற்றியே
பூமாரி