Tuesday, November 20, 2012

கதிர்காம ஸ்வாமிகள் / Kadhirkama Swamigal

கதிர்காம ஸ்வாமிகள் Kadhirkama Swamigal

 ஜெய் ஸீதாராம் 
 



கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானத் திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் மார்க்கத்தில் சீர்காழிக்கு சுமார் 2 கி.மீ. முன்னதாக தென்பாதியில் உள்ள உப்பனாறு ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது (சீர்காழி நகரத்திலேயே தென்பாதி அமைந்துள்ளது).
 



பேருந்து நிறுத்தம் - உப்பனாறு. அங்கே இறங்கிக் கொண்டால், உப்பனாற்றங்கரையில் ஓரத்தில் சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது.  
 

 

இங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் (மயிலாடுதுறை - சீர்காழி வழியில்)  சுவாமிகள் தவம் இயற்றிய இடம் உள்ளது. அங்கே தண்டாயுதபாணி கோவில் அமைத்து சுவாமிகள் வசித்து வந்தார். அந்த இடத்தின்  பெயர் கதிர்காம சுவாமிகள் மடம்.