Friday, June 17, 2016

தேவி மந்திரம், DEVI MANDHIRAM, பொன்மாரி பூமாரியே பொழிவாய் (PON MARI POO MARIYE) சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

தேவி மந்திரம் (DEVI MANTHIRAM)
SARASWATHI NAMASTHUPYAM VARATHE KAMAROOPINI
VIDHYARAMBAM KARISHYAAMI SIDDIRBAVATHUME SADHA
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
--------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா நாராயணா நமோ!
தேவி நாராயணா நமோ!!
லக்ஷ்மி நாராயணா நமோ!!!
பத்ரி நாராயணா நமோ!!!!
------------------------------------------------------------------------------------------------------------------------
பொன்மாரி  பூமாரியே பொழிவாய் அருளை பண்ணாரியே
அருள்வாய்  ஆடி  விளையாடி  திருவேற்காட்டில் கருமாரி.

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
பாம்பெனவே பாங்குடனே படமெடுத்தாடு உருமாறி
மங்கள மங்கையர் குலதேவி மாங்காடு மாரி மகமாயி
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
வேதனை அது களைவாளே சோதனை தன்னை பகிர்வாளே
சுற்றிட அன்னை வடிவுடையாள் திருவெற்றியூரில் குடியுடையாள்
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓராயிரம் கண்ணுடையாள்  உலகம் காக்கும் இமையுடையாள்
புன்னகை தவழும் முகமுடையாள்  புன்னை நல்லூரில் உறைந்திடுவாள்
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
சர்வ லோகினி சாம்பவியே அந்தரி சுந்தரி சௌந்தரியே
சமயம் பார்த்து அருள் தாயி சமயபுரத்து மகமாயி
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
பில்லி சூன்ய பேய் பூதம் தொல்லைகள் அகற்றும் திரிசூலம்
கைதனில் ஏந்தி ஒரு நாழி காத்தருள் உறையூர் வெக்காளி
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாபம் சாபம் பொடிபடுமே  பாளையத்தாளை வழி படவே
பெரிய பாளையத்தம்மன் அருள் பெற்றிட வாழ்வில் நீங்கும் இருள்
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
தீப ஒளி வழி தரிசனமே தீப தர்ஷினி தினம் பெறவே
மாவிளக்கேற்றி தாள் பணிய மயிலை கற்பகத்தாய் அருளே
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
காலம் மாறி போனாலுமே கோலம் மாறி போனாலுமே
மாறாதுந்தன் கோலமம்மா மால்வாய் வாழும் பச்சையம்மா
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தீவில் ஒதுங்கி நின்றாலும் தாவில் விழுந்து கிடந்தாலும்
தோளில் சுமந்து காத்திடுவாள் தொட்டியங்குலத்து மாரியவள்
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
எல்லை வந்திட தொட்ட வினை எல்லாம் போனது விட்டு எனை
குற்றங்குறைகளை போக்கிடம்மா கொன்னையூர் முத்து மாரியம்மா
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
அன்னை மனம் முழு வெள்ளை மதி நெல்லையில் உன் பெயர் காந்திமதி
மாசாணியம்மா வாழும் மலை மகிமை நிறைந்த ஆனைமலை
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------
மங்கையர் நெற்றி  திலகம் நீ  கன்னியர் காவல் தெய்வம் நீ
கண்டவர் மாரி சகலம் நீ கன்னியாகுமரியில் ஸ்ரீதேவி நீ
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
மாரி உந்தன் அருளாலே மாறும் மண்ணும் திருநீராய்
திருமறை போற்றும் மூகாம்பிகை திருவாரூரில் கமலாம்பிகை
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
மாரி என்றாலே மழை பொழியும் தேவி என்றாலே தினை விளையும்
தேடி வந்தாலே வினை அகலும் திருக்கடையூரில் மனம் அடையும்
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஆதி சங்கரன் மேனியிலே பாதியானவள் அபிராமி
தில்லையில் ஆடும் சிவகாமி இல்லையேல் இங்கு சிவனேது
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
காஞ்சியில் அன்னை காமாட்சி காசியில் அன்னை விசாலாட்சி
மதுரையாளும் மீனாட்சி மதுராபுரியிலும் உனதாட்சி
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
தக்க்ஷன் அப்பன் என்றாலுமே தர்க்கம் செய்தாய் தாக்க்ஷாயினி
துக்கம் தாளா நெஞ்சுடனே கயிலை வந்தாய் துணிவுடனே
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தீயும் மாறும் பூவாகவே நீரும் மாறும் பாலாகவே
வசந்தம் வீசும் ஊரானதே வலங்கைமானும் வீடானதே
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
சக்தி என்றே ஜகம் சுழலும் சுற்றி வந்தாலே சுகம் பெருகும்
ஜெயமே தருவாள் ஜகதாம்பாள் புதுக்கோட்டை ஸ்ரீபிரகதாம்பாள்
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
நாடும் ஏடும் புகழுமம்மா நார்த்தாமலை முத்துமாரியம்மா
எண்திசை உன்திசை நாடுதம்மா பட்டுக்கோட்டை மாரியம்மா
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மால் உறங்கும் திருவரங்கம் வந்த நாயகி ரெங்க நாயகி
திருவானை காவலிலே அகிலாண்டேஸ்வரி நாயகியே
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
அறம் தாங்கும் அறந்தாங்கியே வீரமாகாளி வேப்பிலைகாரி
கருணை புரியும் நிரந்தரியே கண்ணபுரத்து புரந்தரியே
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
அன்பின் வடிவம் உமை வடிவம் உமையின் வடிவம் மூவுலகம்
அம்மா வாழும் திருபுவனம் அங்கே பக்தியின் மனம் கமழும்
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி மேல்மலையனூர் ஈஸ்வரி
திருப்பத்தூரில் பூமாயினி திருசெந்தூரும் உந்தன் பதி
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
கண்ணன்குடியில் பூ மிதிக்க கஷ்டங்கள் ஓடும் தலை தெறிக்க
கண்ணனூரிலே கால் பதிக்க எண்ணம் ஈடேறும் நாள் முழுக்க
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
ஓம் தேவி அங்கயற்கண்ணி ஓம் காளி முண்டகக்கண்ணி
முப்பெரும் தேவி முப்பாத்தம்மா மூத்தவள் நீயே முத்தாலம்மா
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
------------------------------------------------------------------------------------------------------------------------------
பூவாடைகாரியம்மா படை வீட்டில் நீ ரேணுகாம்பா
காரைக்குடியில் கொப்புடையம்மா கரகம் சுழலும் கடும்பாடியம்மா
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
சத்திய வாக்கு மீறாமலே தர்மம் காப்பாய் சாளியத்தம்மா
தாலி பாக்கியம் தருவாளம்மா பொற்பனைக்கோட்டை காளியம்மா
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
வினை அகற்றும் வெளுவூர்க்காளி பயம் அகற்றும் பரனூர்மாரி
குறிச்சி குளத்தில் முத்துமாரி சீகனேந்தலில் பச்சையம்மா
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
எழுதும் வேலை என் வேலை என்றது உந்தன் கை வீணை
அகிலம் போற்றும் கலைவாணி அபயம் என்றாலே துணை வா நீ
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
பாடும் வேலை என் வேலையே பகன்றது உந்தன் பொன் வீணையே
நாவில் சரஸ்வதி புகுந்தாயே நமஸ்கரித்தேனே என் தாயே!
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
ஆடும் வேலை என் வேலையே ஆடிட வைப்பது உன் லீலையே
ஆடும் பாதம் உன் பாதமே அபிநயம் யாவும் உனது உபயம்
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மருவத்தூரில் ஆதி சக்தி சிறுவாச்சூரில் மதுரகாளி
திருவக்கரையில் வக்ரகாளி ஆலமேட்டினில் பத்ரகாளி
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
பூர்வ புண்ணிய மனோஹரி சாமுண்டீஸ்வரி ஸ்ரீ ஜனனி
ஓம் சாந்தி சாந்தினியே சோட்டானிக்கரை பகவதியே
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
உலகம் யாவும் ஒரு மாரி தஞ்சை மாரி தமிழ் மாரி
போற்றி போற்றியே பொன்மாரி போற்றி போற்றியே பூமாரி
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!
அம்மே நாராயணா நமோ! தேவி நாராயணா நமோ!! லக்ஷ்மி நாராயணா நமோ!!! பத்ரி நாராயணா நமோ!!!!

Saturday, June 29, 2013

கால பைரவ அஷ்டகம் KALABAIRAVA ASHTAKAM TAMIL

ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய  
கால பைரவ அஷ்டகம்

தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம் |
நாரதாதி யோகிவ்ருந்த வந்திகம் திகம்பரம்
காசிகபுராதிநாத காலபைரவம் பஜே || 1 ||

பானுகோடி பாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம் |
காலகால மம்புஜாக்ஷ மக்ஷசூல மக்ஷரம்
காசிகபுராதிநாத காலபைரவம் பஜே || 2 ||

சூல டங்க பாச தண்ட பாணி மாதிகாரணம்
ச்யாமகாய  மாதி தேவ மக்ஷரம் நிராமயம் |
பீமவிக்ர மம்ப்ரபும் விசித்ர தாண்டவ ப்ரியம்
காசிகபுராதிநாத காலபைரவம் பஜே || 3 ||

புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்தசாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக விக்ரஹம் |
நிக்வணன்-மனோஜ்ஞ ஹேம கிம்கிணீ லஸத்கடிம்
காசிகபுராதிநாத காலபைரவம் பஜே || 4 ||

தர்மஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்
கர்மபாஸ மோசகம் ஸுஸர்ம தாயகம் விபும் |
ஸ்வர்ணவர்ண சேஸபாஸ ஸோபிதாங்கரி  மண்டலம்
காசிகபுராதிநாத காலபைரவம் பஜே || 5 ||

ரத்ன பாதுகா ப்ரபாபிராம பாதயுக்மகம்
நித்ய மத்விதீய மிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்  |
ம்ருத்யுதர்ப்ப நாஸனம் கராளதம்ஷ்ட்ர மோக்ஷணம்
காசிகபுராதிநாத காலபைரவம் பஜே || 6 ||

அட்டஹாஸ பின்ன பத்மஜாண்டகோஸ ஸந்ததிம்
த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜால முக்ர ஸாஸனம் |
அஷ்ட ஸித்தி தாயகம் கபால மாலி கந்தரம்
காசிகபுராதிநாத காலபைரவம் பஜே || 7 ||

பூதஸங்க நாயகம் விஸால கீர்த்தி தாயகம்
காஸிவாஸ லோக புண்ய பாப ஸோதகம் விபும் |
நீதிமார்க்க கோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகபுராதிநாத காலபைரவம் பஜே || 8 ||

காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞான முக்தி ஸாதகம் விசித்ர புண்ய வர்த்தனம் |
ஸோக மோஹ தைன்ய லோப கோப தாப நாஸனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம் ||

குருவே சரணம் ...

ஸ்ரீ மத் நடன கோபால நாயகி ஸ்வாமிகள்

 குருவே சரணம் |  திருவடி சரணம்

எங்கள் ஆன்மீக பயணத்தின் தொடர்ச்சியாக முதலில்
மதுரையிலிருந்து அழகர் கோவில் செல்லும் வழியில் அமைந்திருக்கும் ஸ்ரீ மத்  நடன கோபால நாயகி ஸ்வாமிகள்  ஜீவ சமாதிக்கு சென்றிருந்தோம்.

சுவாமிகளின் வரலாறு :

நடனகோபாலநாயகி சுவாமிகள், மதுரையில் 1843, ஜனவரி 9 (மார்கழி மிருகசீரிட நட்சத்திரம்) வியாழக்கிழமை அவதரித்தார். இவரது தந்தையார் ரங்கார்யர், தாய் லட்சுமிபாய். பெற்றோர் பிள்ளைக்கு ராமபத்ரன் என்று பெயரிட்டனர். பள்ளியில் படித்த காலத்தில் ஓம் என்ற மந்திரத்தின் பொருளைக் கேட்டு ஆசிரியர்களையே திகைக்கச் செய்தார். அவரது மனம் எப்போதும் இறைச் சிந்னையிலேயே இருந்தது. இளமையில் வணிகர் ஒருவரிடம் கணக்கெழுதும் பணியில் சேர்ந்தார். ஆனால், வணிகர் ராமபத்ரனின் இறைச்சிந்தனையைக் கண்டு வேலையை விட்டு வெளியேற்றினார். பின்னர் தன் வீட்டுத் தொழிலான நெசவுத்தொழிலைச் செய்தார். திடீரென்று ஒருநாள் வீட்டைவிட்டு கிளம்பி, திருப்பரங்குன்றத்தில் துறவியைப் போல யோகத்தில் ஆழ்ந்தார். 12 ஆண்டுகால தவத்திற்கு  பின், பரமக்குடி நாகலிங்க அடிகளாரிடம் சதாநந்தர் என்று தீட்சாநாமம் பெற்றார். சித்தரைப் போல பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களிடம் பிரபலமானார்.ஒருமுறை மதுரை அருகில் உள்ள அழகர்கோவில் சுந்தராஜப்பெருமாளை தரிசித்தார். அன்றுமுதல் ஆழ்வார்களின் மீதும், நாலாயிரதிவ்ய பிரபந்தங்களின் மீதும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அங்குள்ள ஆதிநாதசுவாமியை தரிசித்தார். அங்கே, நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடல்களை வடபத்ராரீயர் என்ற பக்தர் பாடிக் கொண்டிருந்தார். அந்த வரிகள் சதாநந்தரின் மனதை கொள்ளை கொண்டது. அவர் அந்த பக்தரை சாஷ்டாங்கமாக பணிந்து தமக்கு வழிகாட்டும்படி கேட்டுக் கொண்டார். அந்த பக்தர், அவரைத் தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார். விஷ்ணுவின் அம்சம் நிறைந்த சதா நந்தருக்கு, நடன கோபால் என்று பெயரிட்டார்.
ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், கீதாபாஷ்யம், பிரம்மசூத்திர பாஷ்யம், பகவத்கீதை, விஷ்ணு புராணம், நாலாயிரதிவ்ய பிரபந்தம் ஆகியவற்றை அவரிடம் கற்று முடித்தார். தன்னை ஒரு பெண்ணாகவும், திருமாலை ஆணாகவும் கருதி ஹரிபக்தியில் ஆழ்ந்தார். பின், பல திவ்யதேசங்களுக்கு தீர்த்தயாத்திரை புறப்பட்டார். ஸ்ரீரங்க ரங்க நாதர் மீது பாடல்கள் பாடினார். அங்கிருந்த ஸ்ரீரங்கநாராயண ஜீயர் நடனகோபாலை நடனகோபால நாயகி என்று அழைத்தார்.  தம்முடைய வாழ்நாள் முடிய இருப்பதை முன்கூட்டியே உணர்ந்து, அழகர்கோவில் அருகிலுள்ள காதக்கிணறு என்னுமிடத்தில் தமக்கான பிருந்தா வனத்தை(சமாதி) அமைக்குமாறு கூறினார். 1914 ஜனவரி 8, வைகுண்ட ஏகாதசி நாளில்பகவான் ஹரி வந்து விட்டார் என்று சொல்லிக் கொண்டே மகாவிஷ்ணுவின் திருவடிகளில் இணைந்தார். நடனகோபால நாயகி சுவாமிகள் என்று பக்தர்களால் இன்று போற்றப்படுகிறார். இவர் பிரபந்தப்பாடல்கள், பக்திரச கீர்த்தனைகள், நாமாவளிகள், தமிழ் கீதகோவிந்தம் ஆகியவற்றை இயற்றியுள்ளார். ஸ்ரீமதே ராமானுஜா என்ற மந்திரம் ஜெபித்தால் மனத்தூய்மை உண்டாகும் என்கிறார் சுவாமிகள். ராமானுஜரின் உரைகளையும்,உபதேசங்களையும் படிக்கவேண்டும் என்று நம்மை வேண்டுகிறார். பிருந்தாவனக்கோயிலில் இவர் வழிபட்ட ருக்மணி, சத்யபாமா சமேத நடனகோபால கிருஷ்ணர் விக்ரகம் உள்ளது. இவர் பயன்படுத்திய ஆண்டாள் கொண்டை, துளசிமணிமாலை, பாதுகையை (காலணி) ஆகியவற்றை இங்கு தரிசிக்கலாம். இவரது அவதார தினம் டிசம்பர் 21, மார்கழி மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிருந்தாவனத்தில் கொண்டாடப்படுகிறது.

நன்றி தினமலர் 

Tuesday, November 20, 2012

கதிர்காம ஸ்வாமிகள் / Kadhirkama Swamigal

கதிர்காம ஸ்வாமிகள் Kadhirkama Swamigal

 ஜெய் ஸீதாராம் 
 
கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானத் திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் மார்க்கத்தில் சீர்காழிக்கு சுமார் 2 கி.மீ. முன்னதாக தென்பாதியில் உள்ள உப்பனாறு ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது (சீர்காழி நகரத்திலேயே தென்பாதி அமைந்துள்ளது).
 
பேருந்து நிறுத்தம் - உப்பனாறு. அங்கே இறங்கிக் கொண்டால், உப்பனாற்றங்கரையில் ஓரத்தில் சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது.  
 
இங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் (மயிலாடுதுறை - சீர்காழி வழியில்)  சுவாமிகள் தவம் இயற்றிய இடம் உள்ளது. அங்கே தண்டாயுதபாணி கோவில் அமைத்து சுவாமிகள் வசித்து வந்தார். அந்த இடத்தின்  பெயர் கதிர்காம சுவாமிகள் மடம்.